எனது மனைவி கீதா 6.11.2022 அன்று மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் கோமாநிலைக்கு சென்று உயிர்பிழைத்தார் ஆனால் அவரது வலது கால் மற்றும் கை முழுமையாக செயல்படவில்லை. நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள பிசியோ ஒன் கிளினிக் பற்றி கேள்விப்பட்டு தலைமை மருத்துவர் திரு காஜாமைதீன் சார் அவர்களை சந்தித்து அங்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அறிந்தோம்.மிகுந்த நம்பிக்கை தந்தார். 27 .11. 2022 அன்று பிசியோ ஒன் மூளை நரம்பியல் மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் என் மனைவி கீதாவை சேர்த்தோம். கடந்த 28 நாட்கள் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று 23 .12. 2022 அன்று முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினோம் .நன்றாக நடக்கவும் ,சாப்பிடவும் ,பேசவும், முன் போல செயல்படவும் முடிகிறது. எங்களுக்கு நம்பிக்கை வார்த்தை தந்தது மட்டுமல்ல தினமும் காலை மாலை எனது மனைவி கீதாவின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து விசாரித்து சிகிச்சை அளித்து மருத்துவர் திரு காஜா மைதீன் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பிசியோ தலைமை மருத்துவர் திரு தண்டபாணி சார் எனது மனைவி கீதாவிற்கு பிசியோ சிகிச்சை அளித்த மருத்துவர் திரு மதன் சார் மருத்துவர் சுஜி அவர்களுக்கும் அங்குள்ள பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
- காலை மாலை இருவேளை பிசியோ சிகிச்சை
- 24 மணி நேர மருந்து கண்காணிப்பு
- நட்சத்திர விடுதி போல சுத்தமான சுகாதாரமான அறை
- மூன்று வேலையும் தரமான உணவு
- அன்பாக பழகும் பணியாளர்கள்
- தூய்மையான இயற்கை சூழல் நிறைந்த அருமையான சுற்றுப்புறச் சூழல்
- பக்கவாத நோயாளிகளுக்கு இம்மருத்துவமனை ஒரு வரப் பிரசாதம்.
நன்றி
அன்புடன்
ஆர் பி செல்லதுரை எஸ். கீதா .கரூர்
86957 90999, 73584 47999
நான் 16 .9. 22 அன்று பிசியோ ஒன் சென்டரில் அனுமதிக்கப்பட்டேன். நான் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு பின் வலது கை கால் முழுமையாக செயல்படாத நிலையில் மற்றும் பேச இயலாத நிலையில் அனுமதிக்கப்பட்டேன் இங்கு எனக்கு தீவிரமாக பிசியோதெரபி ஆபரேஷன் தெரபி மற்றும் பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர் மட்டும் தெரபிஸ்ட்களின் கனிவான கவனிப்பு, இயற்கையான காற்றோட்ட சூழல் சுவையான சுகாதாரமான உணவு கிடைத்தது. 4 .11. 22 அன்று நான் டிசார்ஜ் ஆனேன்.
தற்சமயம் என்னால் தனியாக நடக்க முடிகிறது, பேச முடிகிறது, வலது கையால் உணவு எடுத்து உண்ண முடிகிறது .பிசியோ ஒன் நிர்வாகம் ,தெரபிஸ்ட் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு
அப்துல் அஜீஸ்
எருமப்பட்டி
Contact Us
- Vathamadai, Koodachery Road,Pillur, Paramathi.637207
- physioone.co.in
- (+91)7871555855
Popular Services
- Physiotherapy
- Occupational Therapy
- Speech Therapy
Working Hours